வெப்ப அலைகளில் இருந்து கால்நடைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்:
- BookMyLivestock
- Apr 11, 2024
- 1 min read
வெப்பநிலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இயல்பாகவே
விவசாயிகளுக்கு கால்நடைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று அறிவார்கள், ஆனால் புதிதாக
கால்நடைகள் வளர்ப்பவர்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்:
கால்நடைகளை பகல் பொழுதில் நல்ல காற்றோட்டமான கொட்டகையிலும் அல்லது மரத்தடி நிழல்களிலும் கட்டுவது நல்லது.
வெப்பம் அதிகமாக இருக்கும் போது(முக்கியமாக 11 மணி முதல் மாலை 4 மணி வரை) காளைகளுக்கு வேலை தருவதை தவிர்க்கவும்.
தண்ணீர் தொட்டிகளை நிழலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் மற்றும் தாது உப்புக் கலந்த தண்ணீரை கொடுப்பது நல்லது. அதிக வெப்பமான தண்ணீரை கால்நடைகளுக்கு தருவதை தவிர்க்கவும்.
முடிந்தவரை,கொட்டகை கூரையை வைக்கோலால் மூடி வெப்பநிலை குறைக்கவும் மற்றும் கொட்டகையில் வாட்டர் ஸ்ப்ரே அல்லது விசிறிகள் பயன்படுத்தலாம்.
கடுமையான வெப்பத்தின் போது கால்நடைகளை நீர் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றுகுளிப்பாட்டவும் அல்லது கால்நடைகள் மீது தண்ணீரை தெளிக்கவும்.
கோழிப் பண்ணைகளில் சீரான காற்றோட்டம் மற்றும் திரைசீலைகள் அமைப்பது நல்லது.
ஆடு மாடுகளை வெப்பம் குறைவான நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்புவது நல்லது.
அதிகமான இளைப்பு மற்றும் நாக்கை வெளியே நீட்டி எச்சில் ஊற்றினால் கால்நடைகள் மீது தண்ணீரை தெளிப்பது நல்லது.