சினை மாடுகளைப் பராமரிப்பது எப்படி?
- BookMyLivestock
- Apr 17, 2024
- 1 min read
Updated: May 6, 2024
விவசாயிகளாகிய நாம் மாடுகளுக்குச் சினை ஊசி போடும் தேதியைக் 📅 கண்டிப்பாகக்
குறித்து வைத்துக் கொள்ள வேண்டும், ஊசி போட்ட தேதியிலிருந்து ஒன்பது மாதம் 10 நாட்களில் கன்று ஈனும் இது ஒரு வாரம் மின்னும் பின்னும் இருக்கலாம் மாடுகளைப்
பொறுத்து மாறுபடும், அனுபவமுள்ள விவசாயிகள் மாடுகள் கன்று ஈனும் தேதியை
எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.
சினை மாடுகளை வெயிலில் ☀️ மேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும் உரிய நேரத்தில் தண்ணீர்💦 மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.
சினை மாடுகளை மற்ற மாடுகளில் இருந்து பிரித்து காற்றோட்டம் உள்ள கற்கள் இல்லாத
பகுதியில் கட்ட வேண்டும்.
அதேபோல சினை மாடுகளை அதிக தூரம் நடக்க வைப்பதும் விரட்டுவதும் மேடு பள்ளம் உள்ள
பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது, சமமான பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டால் போதும் அதற்கென்று தனியாக உடற்பயிற்சி தேவையில்லை.
ஏழு மாதங்களுக்குப் பிறகும் பால் கரந்து கொண்டிருக்குமானால் அவற்றின் கறவை
நேரத்தைத் தள்ளிப்போடுதல், தீவனம், தண்ணீர் இவற்றைக் குறைத்தல் போன்றவற்றைக் கையாண்டு கறவையை வற்றச் செய்வது அவசியம்.
முந்தைய ஈற்றின்போது பால்ச்சுரம் வந்த மாடுகளுக்கு அவற்றைத் தடுக்கும் நோக்கில் கடைசி காலச்சினையில் கால்சியம் ஊசிகளைப் போடக்கூடாது.
கடைசி இரண்டு மாதங்களில் மாட்டின் எடை 60-80 கிலோ கூடி விலா எலும்புகள் தெரியா
வண்ணம் இருக்க வேண்டும்.
கடைசி இரண்டு மாதங்களில் கலப்பினத் தீவனக் கலவையோடு தாது உப்புக் கலவையையும்
சேர்த்து அளிக்க வேண்டும்.
அதிக ☀️ வெப்பம் மற்றும் குளிரிலிருந்து மாடுகளைச் சரியாகப் பராமரித்துக்கொள்ள வேண்டும்.